எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு

கோடைகால
பயிற்சி திட்டம்

கோடைகால பயிற்சி வகுப்புகள்:

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் முதுநிலை அறிவியல் பயிலும் மாணாக்கர்களுக்கு அறிவியல் ஆராய்ச்சியினை ஊக்குவிக்கும் விதமாக கோடைகால அறிவியல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். முதுநிலை அறிவியல் துறைகளில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதவியல் ஆகிய பிரிவுகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்கள் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படுவர், இத்தேர்வில் 75% மாணாக்கர்கள் கிராமப்புற பகுதிகளில் இருந்தும், 25% மாணாக்கர்கள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கல்லூரிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதவியலில் கோடைக்கால பயிற்சி வகுப்புகள் “மே மற்றும் ஜீன்” மாதங்களில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும்.

தமிழ்நாடுஅறிவியல் அறிஞர்கள் கையேடு

உதவித் தொகை

தமிழ்நாடு மாணவர்கள் அறிவியல் காங்கிரஸ்

உறுப்பு-நிறுவனங்கள்

மின்- இதழ்