எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு

நிகழ்ச்சிகள்

கோடைகால பயிற்சி வகுப்புகள்:

அறிவியல் ஆராய்ச்சியில் மாணாக்கர்களை ஊக்குவிப்பதற்காக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் முதுநிலை அறிவியல் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதவியல் மற்றும் உயிரியல் ஆகிய துறைகளில் கோடைகால பயிற்சி வகுப்புகள் அறிவியல் நகரத்தால் நடத்தப்பட்டது. இப்பயிற்சி முகாம் மே 28 முதல் ஜீன் 17, 2019 வரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணாக்கர்களில் 75% சதவீதத்தினர் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் பயிலும் மாணாக்கர்கள் என்பது உறுதி செய்யப்படுகிறது.

Cisco Cisco Cisco Cisco


அறிவியல் பட்டறைகள்:
Cisco

சென்னை மற்றும் சென்னையினை சுற்றியுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை அறிவியல் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்காக அறிவியல் நகரத்தால் தாவரவியல் மற்றும் உயிர் தொழில்நுட்பத்தில் உள்ள ஆய்வக நுட்பங்கள்” என்ற தலைப்பில் 05.08.2019 முதல் 08.08.2019 வரை அறிவியல் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

Cisco

சென்னை மற்றும் சென்னையினை சுற்றியுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை அறிவியல் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்காக அறிவியல் நகரத்தால் “விலங்கு அறிவியல் மற்றும் உயிர் தொழில்நுட்பத்தில் ஆய்வக நுட்பங்கள்” என்ற தலைப்பில் 19.08.2019 முதல் 22.08.2019 வரை அறிவியல் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

அறிவியல் விரிவுரைகள் மற்றும் செயல்முறைகள்

அறிவியல் நகரம் “அடிப்படை அறிவியலில்” விரிவுரைகள் மற்றும் செயல்முறைகளை அரசு பள்ளிகளில் 8 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் பயன் பெறும் வகையில் அந்தந்த பள்ளி வளாகத்திலேயே நடத்தியது. இதில் ஆறு அரசு பள்ளிகளுக்கு பதிமூன்று வகுப்புகள் 14 அக்டோபர் முதல் 31 அக்டோபர், 2019 வரை நடைபெற்றது.

பதிவிறக்கம் - நிகழ்ச்சி நிரல்
IV. தேசிய கருத்தரங்கம் “அடிப்படை அறிவியலில் தற்போதைய ஆராய்ச்சிகள்“
தேசிய கருத்தரங்கம்

அறிவியல் நகரம் அடிப்படை அறிவியலில் தேசிய கருத்தரங்கினை அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் முதுநிலை பயிலும் மாணாக்கர்களுக்காக 25.11.2019 முதல் 29.11.2019 வரை அறிவியல் நகர அரங்கத்தில் நடத்தியது. இக்கருத்தரங்குகளில் சுற்றுச்சூழல் அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், மற்றும் விலங்கியல் ஆகிய துறைகளின் வகுப்புகள் நடைபெற்றன. சுமார் 980 மாணாக்கர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர்.

பதிவிறக்கம் - நிகழ்ச்சி நிரல்

தமிழ்நாடுஅறிவியல் அறிஞர்கள் கையேடு

உதவித் தொகை

தமிழ்நாடு மாணவர்கள் அறிவியல் காங்கிரஸ்

உறுப்பு-நிறுவனங்கள்

மின்- இதழ்