அறிவியல் நகரம், தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனம் ஆகும். இந்நிறுவனமானது, தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் , 1975-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் நகரத்தின் கிழக்கில் பக்கிங்காம் கால்வாயும், தெற்கில் தரமணி 100 அடி சாலையும் மேற்கில் வேளச்சேரி சாலை மற்றும் வடக்கில் அடையாறு ஆற்றினையும் புவியியல் எல்லைகளாக அரசு வரையறுத்துள்ளது.அறிவியல் நகரம் எல்லைகளை வரையறுக்கப்பட்ட பகுதிகளில் தனித்துவமான .
60க்கும் மேற்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களானது அறிவியல் நகரத்தின் உறுப்பு நிறுவனங்களாக
செயல்பட்டு வருகின்றன.
முக்கிய நோக்கங்கள்
- அறிவியல் கருத்தரங்கம், பயிற்சிப் பட்டறைகள், மாநாடுகள் மற்றும் பயிற்சி
வகுப்புகள் நடத்துதல் போன்றவற்றின் மூலமாக பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள்,
அறிவியல் ஆய்வு மேற்கொள்பவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அறிவியலை
பரப்புதல்.
- அறிவியல் ஆராய்ச்சியில் பங்களிப்பினை புரிந்த அறிவியலாளர்களை
பெருமைப்படுத்தும் விதமாக “தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது”
வழங்கப்படுகிறது.
- அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பினைப் புரிந்த முதுநிலை
அறிவியலாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு “தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர்
விருது “ வழங்கப்படுகிறது.
- அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பினைப் புரிந்த இளநிலை
அறிவியலாளர்களை மேற்கொண்டு ஆராய்ச்சியினை ஊக்குவிக்கும் விதமாக
“தமிழ்நாடு இளம் அறிவியலாளர்கள் விருது” வழங்கப்படுகிறது.
- தமிழ்நாட்டில் ஊரகப்பகுதியில் வசிக்கும் அறிவியலாளர்களின் தனித்துவமான கண்டுபிடிப்புகளை கண்டறிந்து அவர்களுக்கு “ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுகள் வழங்கப்படுகிறது
- பள்ளி மாணாக்கர்களுக்கு அறிவியலில் வழிகாட்டியாக இருந்து சிறப்பாக ஊக்குவித்து
பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு “ சிறந்த அறிவியல்
ஆசிரியர் விருதுகள் வழங்கப்படுகிறது.