எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு

விருதுகள்

தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது:

60 வயதிற்கு மேற்பட்ட அறிவியலாளர்களுக்கு தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதிற்கு விண்ணப்பிப்போர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சமுதாயத்திற்கு பயன் அளிக்கக் கூடிய வகையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் வல்லுநர் குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு அதிலிருந்து ஒரு விண்ணப்பதாரர் இவ்விருதிற்கு தேர்வு செய்யப்படுவர். இவ்விருது பெறுவோருக்கு காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி / பிப்ரவரி மாதத்தில் அறிவியல் நகரத்தால் நடத்தப்படும் சென்னை அறிவியல் விழாவில் இவ்விருது வழங்கப்படும்.
விண்ணப்ப படிவம் / விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள் மற்றும் விதிகள்

தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர் விருது:

தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர் விருது, 45 வயதிற்கு மேற்பட்ட 60 வயதிற்கு உட்பட்ட அறிவியலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விண்ணப்பதாரர் இவ்விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படுவார். பெறப்பட்ட விண்ணப்பங்கள் வல்லுநர் குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு இவ்விருதிற்கு தேர்வு செய்யப்படுவர். இவ்விருது பெறுவோருக்கு காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி / பிப்ரவரி மாதத்தில் அறிவியல் நகரத்தால் நடத்தப்படும் சென்னை அறிவியல் விழாவில் இவ்விருது வழங்கப்படும்.
விண்ணப்ப படிவம் / விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள் மற்றும் விதிகள்

தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது:

தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது, 45 வயதிற்குட்பட்ட அறிவியலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சமுதாயத்திற்கு பயன் அளிக்கக் கூடிய வகையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் வல்லுநர் குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு இவ்விருதிற்கு தேர்வு செய்யப்படுவர். இவ்விருது பெறுவோருக்கு காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி / பிப்ரவரி மாதத்தில் அறிவியல் நகரத்தால் நடத்தப்படும் சென்னை அறிவியல் விழாவில் இவ்விருது வழங்கப்படும்.
விண்ணப்ப படிவம் / விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள் மற்றும் விதிகள்

தமிழ்நாடு ஊரக கண்டுபிடிப்பாளர் விருது:

கிராமப்புற மக்களில் பெரும்பான்மையானவர்கள் முறையாக கல்விக் கற்காமலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பற்றி அதிகம் தெரியாமல் இருந்த நிலையிலும் சமூகத்திற்கு நன்மை பயக்கும் பல அறிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளனர். கல்வி மற்றும் பண நெருக்கடி உள்ளிட்ட பல தடைகள் இருந்தபோதிலும், உன்னதமான கண்டுபிடிப்புகள் இவர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. கிராமப்புற மக்களால் சமூகத்தின் நலனுக்காக குறைந்த செலவில் பல கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய கண்டுபிடிப்புகள் பாரம்பரிய அறிவு மற்றும் படைப்பாற்றல் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை அடிப்படையாக கொண்டு அறிவியல் நகரம் ஊரக கண்டுபிடிப்பாளர் விருதை அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்வு செயல்முறை மூலம் இரண்டு ஊரக கண்டுபிடிப்பாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் இவ்விருதிற்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக கண்டுபிடிப்பாளர்கள் இருவருக்கும் தலா ரூ. 1,00,000/-க்கான (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) காசோலை, சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசும் வழங்கப்படும்
விண்ணப்ப படிவம் அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலமாக வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு சிறந்த அறிவியல் ஆசிரியர்கள் விருது:

இளம் மாணவர்களின் கல்வி முறையில் ஆசிரியர்கள் மிக முக்கிய பங்கு வகுக்கின்றனர். ஆகவே நமது ஆசிரியர்கள் சமுதாயத்தை நாம் மதிக்கிறோம் என்பதைக் உணர்த்துவதற்காக அறிவியல் நகரம் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதை அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்வு செயல்முறை மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 10 அறிவியல் ஆசிரியர்கள் இவ்விருதிற்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த விருது பொது பிரிவைச் சேர்ந்த 5 ஆசிரியர்களுக்கும், தமிழ் பிரிவைச் சேர்ந்த 5 ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும். மாணவர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக முன்மாதிரியான சேவையைச் செய்யும் ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டு ரூ 25,000/- ரொக்கப் பரிசு (காசோலையாக), சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசும் வழங்கப்படும்.
விண்ணப்ப படிவம் / விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள் மற்றும் விதிகள்

தமிழ்நாடுஅறிவியல் அறிஞர்கள் கையேடு

உதவித் தொகை

தமிழ்நாடு மாணவர்கள் அறிவியல் காங்கிரஸ்

உறுப்பு-நிறுவனங்கள்

மின்- இதழ்